நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

சிங்க தோல் போர்த்திய கழுதை


 

ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் பக்கத்துக் கிராமத்தில் இருந்து ஒரு கழுதை வழி மாறி அந்த காட்டிற்குள் வந்தது. அந்த கழுதை வரும் வழியில் பல விலங்குகள் பயத்துடன் ஓடிக்கொண்டிருந்ததாம். அதில் ஒரு மானும் இருந்தது.

அப்பொழுது அந்த கழுதை மானிடம் ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன? என்று கேட்டது. அதற்கு மான் இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதனை கண்டுதான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம் என்று கூறிவிட்டு சென்றது.
இருப்பினும் கழுதை சிங்கத்தின் வீரத்தை தெரிந்து கொண்டே அந்த காட்டிற்குள் சென்றது. சிறிது தூரம் கடந்து சென்றதில் கழுதை கலைப்படைந்துவிட்டது. பின் கழுதை அந்த காட்டிற்குள் ஒரு ஓடையைப் பார்த்தது.

பின் கழுதை தண்ணீர் அருந்த அந்த ஓடைக்கு சென்றது. அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற விலங்குகளின் தோலை அங்கிருந்துப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.

அதனைப் பார்த்த கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துக் தன் உடன்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுதையும் பார்ப்பதற்கு சிங்கம் போலவே இருந்ததினால் மற்ற விலங்குகளும் கழுதையை சிங்கம் என்று நினைத்து பயந்து ஒதுங்கி சென்றன.

மிருகங்கள் அனைத்தும் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழி விட்டு ஒதுக்குவதை பார்த்த கழுதைக்கு கர்வம் தலைக்கு ஏறியது. சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலவி கொண்டிருந்தது, அப்பொழுது அங்கு ஒரு நரியை பார்க்கிறது.

சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜா, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வரமாட்டேன் என்று கழுதையிடம் கூறியது.

கழுதையும் சிங்கத்தை போல் கர்ஜிக்கணும்னு நினைத்து “ங்கெ ங்கெ” ன்னு கத்தியது. ஆகவே அதோட குரல் அது கழுதையினு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவே இல்லை.

அதுவும் இல்லாம “எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு” என்றது கழுதை.

அதற்கு நரியோ கழுதையைப் பார்த்து முடியாது என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது என்று கூறியது.

கழுத்தையும் அவமானத்தில் தலைகுனிந்தது. அதன் பிறகு தனது வேஷத்தை கலைத்துவிட்டு, தனது உண்மையான உருவத்தில்

இந்த கதையின் நீதி:

நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேஷம் போட்டாலோ அல்லது மற்றவர்கள் போல நடந்து கொள்வதாலோ அவமானம் தான் மிஞ்சும். ஆகவே நாம் நாமாகவே இருப்போம் நன்றி வணக்கம்..!

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்