கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

எளியோரை அழிப்பது எளிது



வழி தவறிய ஆட்டுக்குட்டி, தன் தாயைத் தேடி அலைந்தது. தாயைக் காணவில்லை. களைப்பு மிகுந்தது ஆட்டுக்குட்டிக்கு. அருகில் இருந்த ஓடையில் தண்ணீர் பருகத் தொடங்கியது.

அப்போது, சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்த ஓநாய், “ஆட்டுக் குட்டியே!” என்று உறுமியது.

ஆட்டுக்குட்டி பயந்து, நடுநடுங்கியது. தண்ணீர் குடிக்கவில்லை.

“தண்ணிரை ஏன் கலக்குகிறாய்?” என்று கேட்டது ஓநாய். “நான் கலக்கவில்லையே, ஒரமாய் நின்று தான் பருகுகிறேன்” என்று நடுங்கிக் கொண்டே கூறியது ஆட்டுக்குட்டி “அது சரி! போன வருடம் என்னை ஏன் திட்டிப் பேசினாய்?” என்று அதட்டியது ஓநாய்.

“ஐயோ நான் பிறந்தே ஏழு மாதங்கள் தானே ஆகின்றன!" என்றது ஆட்டுக்குட்டி.

“நீ திட்டவில்லை என்றால், உன் தாய் திட்டியிருக்கலாம் அல்லது உன் தந்தை திட்டியிருக்கலாம்?” என்றது ஓநாய்.

என் பெற்றோர் யாருக்குமே தீங்கு செய்யமாட்டார்கள் என்று பணிவோடு கூறியது ஆட்டுக்குட்டி

“இல்லை என்றால், உன் இனத்தார் எவரேனும் திட்டியிருக்கலாம், அது உனக்கு எப்படி தெரியும்? அதற்கு இப்போது நீ தான் பலி!” என்று கூறி ஆட்டுக்குட்டி மீது பாய்ந்து கொன்று தின்றது அந்த ஓநாய்

ஆட்டுக்குட்டிக்குப் பரிந்து பேச எவரும் இல்லை
எளியோரை வலியோர் அழிப்பது இயல்பே!

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்