கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

மஞ்ச ரோஜாவும் குட்டி இளவரசனும்



முன்னொரு காலத்துல பூமி மாதிரியே இருக்குற இன்னொரு கிரகத்தில ஒரு குட்டி இளவரசர் வாழ்ந்துகிட்டு வந்தாரு.
அவர் தனியா இருந்தாலும் எப்பவும் சுறுசுறுப்பா இருப்பாரு,அந்த கிரகத்துல இருக்குற எரிமலை கலை சுத்தம் செய்யிறது அவருக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்.
அதனால தினமும் காலையில எந்திரிச்சதும் எரிமலைகளை சரி செஞ்சு சுத்தமா வச்சிக்கிட்டு ஆரம்பிச்சிடுவாரு.
ஒருநாள் வானத்துல இருந்து ஒரு விதை ஒன்னு அந்த கிரகத்துல விழுந்துச்சு ,உடனே அந்த இளவரசர் அத புதைச்சு வச்சு தண்ணி ஊத்துனாரு.
கொஞ்ச நாள்ல அந்த விதை முளைச்சி அழகான ஒரு மஞ்சள் ரோஜா செடியா மாறுச்சு,அன்னைல இருந்து அந்த ரோஜாவும் அந்த குட்டி இளவரசரும் ரொம்ப நண்பர்களா இருந்தாங்க.
ஆனா அந்த குட்டி ரோஜா குட்டி இளவரசர் எப்பவும் தன்கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டுச்சு ,அது இளவரசருக்கு கோபத்தை ஏற்படுத்துச்சு ,எனக்கு நிறய வேலை இருக்கு அத விட்டுட்டு இந்த மஞ்சள் ரோஜாவோடவே இருக்கமுடியுமானு யோசிச்சாறு.
அதனால் பக்கத்து கிரகங்களுக்கு போயி நிறய நண்பர்களை தேட முடிவு பண்ணினாரு,தன்னோட நண்பன் தன்னை பிரிஞ்சி போறத நினச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு அந்த மஞ்ச ரோஜா.

பக்கத்து கிரகத்துக்கு போன இளவரசர் அங்க ஒரு ராஜாவை பார்த்தாரு ,அவரு கிட்ட நாம் நண்பர்களா இருப்பமானு கேட்டாரு.
அதுக்கு அந்த ராஜாவும் சரினு சொன்னாரு, ஆனா அந்த மஞ்சள் ரோஜாச்செடி மாதிரி குட்டி இளவரசரை நேசிக்காம அவரோட வேலைகளை மட்டுமே செஞ்சுகிட்டு இருந்தாரு அந்த அரசர், அதனால அவர தொந்தரவு செய்ய வேணாம்னு அடுத்த கிரகத்துக்கு கிளம்பி போனாரு அந்த குட்டி இளவரசர்.

அங்க ஒரு நல்ல ட்ரெஸ் பண்ணுன ஒருத்தர் இருந்தாரு ,அவருகிட்ட நாம நண்பர்களா இருக்கலாமான்னு கேட்டாரு அதுக்கு அவரும் சரினு சொன்னாரு.
ஆனா அவரும் தன்னுடைய வேலைகளை பார்குறதுலேயே குறியா இருந்தாரே தவிர குட்டி இளவரசர் கிட்ட நேரத்தை செலவிடவே இல்ல அதனால அடுத்த கிரகத்துக்கு கிளம்பி போனாரு குட்டி இளவரசர்.

அந்த கிரகத்துல ஒரு ஆராய்ச்சியாளர் இருந்தாரு ,அவருகிட்ட நாம நண்பர்களா இருக்கலாமான்னு அந்த குட்டி இளவரசர் கேட்டாரு ,அதுக்கு அவரும் சரினு சொன்னாரு.

ஆனா அந்த ஆராய்ச்சியாளர் தொடர்ந்து தன்னோட ஆராய்ச்சி புத்தகங்களை படிச்சிகிட்டே இருந்தாரு ,அதனால அடுத்த கிரகத்துக்கு போனாரு குட்டி இளவரசர்.
அங்க ஒரு புத்திசாலி நரி இருந்துச்சு ,அந்த நரி குட்டி இளவரசரை பார்த்ததும் அவரோட கதையை கேட்டுச்சு.
உடனே குட்டி இளவரசர் மஞ்சள் ரோஜாவ பத்தியும் அதோட தொந்தரவு பத்தியும் ,தான் நண்பர்கள் தேடி அலைஞ்சு கதையையும் சொன்னாரு.

நரி சிரிச்சிகிட்டே சொல்லுச்சு , நீ நண்பர்கள் தேடி போய் நண்பர்கள் கிடைச்சும் அவுங்க உங்கூட நேரம் செலவிடலானு தெரிஞ்சதும் ஒவ்வொரு கிரகத்துல இருந்தும் திரும்ப வந்துட்ட ,அந்த மஞ்சள் ரோஜாவும் நீயும் இப்ப ஒண்ணுதான் உனக்காக யாரும் நேரத்தை செலவிட விரும்பல அதே மாதிரித்தான் நீயும் உன்ன நண்பனா நினச்சா மஞ்சள் ரோஜாவுக்கு நேரம் செலவிடலனு சொல்லுச்சு.

அப்பத்தான் குட்டி இளவரசருக்கு புரிஞ்சது தான் முதல்ல நண்பர்களுக்கு நேரத்தை செலவிடாம ,அடுத்தவங்க மட்டும் தன்கூட நேரத்தை செலவிடனும்னு நினைச்சது ரொம்ப தப்புனு புரிஞ்சிக்கிட்டாரு.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்