கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

கழுகும் வண்டும்

ஒரு காட்டுக்குள்ள ஒரு முயல் நடந்து போய்கிட்டு இருந்துச்சு.
அப்ப ஒரு கழுகு அத கொத்தி திங்க வந்துச்சு, கழுக பார்த்ததும் முயல் ஓடி ஒளிஞ்சிகிடுச்சு.
அப்ப அதோட  நண்பன் வண்டு அங்க வந்துச்சு , உடனே முயல் தன்ன காப்பாத்த சொல்லி கேட்டுச்சு.

தைரிய சாலியான வண்டு கழுகுகிட்ட கேட்டுச்சு தயவு செஞ்சு என்னோட நண்பனை ஒன்னும் செய்யாதனு கேட்டுச்சு.
ஆனா கோபக்கார கழுகு வண்டு பேச கேக்கல, அங்குட்டு போக சொல்லுச்சு.
மீண்டும் குறுக்க வந்த வண்ட ஒரே அடி அடிச்சு பள்ளத்துல உருட்டிவிட்டுச்சு.
வண்டு சுதாரிச்சு எழுறதுக்கு முன்னாடி, அந்த முயல் குட்டிய கொத்தி தின்னுடுச்சு அந்த கழுகு.

அத பார்த்த வண்டுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு.

நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் என்னோட பேச்ச கேக்காம இப்படி என்னோட நண்பனை தின்ன உன்ன நிம்மதியா இருக்க விடமாட்டேனு சபதம் போட்டுச்சு வண்டு.

அன்னைக்கு இருந்து கழுகு எங்க கூடு காட்டுதுனு பார்த்துகிட்டே இருந்துச்சு வண்டு.
அந்த கூட்டுக்கு வந்து பார்த்துச்சு வண்டு ,அங்க கழுகு நிறைய முட்டை போட்டு வச்சிருந்துச்சு.

கழுகோடா முட்டைய எல்லாத்தையும் கீழ தள்ளி விட்டுச்சு அந்த வண்டு.
கூட்டுக்கு திரும்பி வந்த கழுகுக்கு ஒரே அதிர்ச்சியா இருந்துச்சு, இருந்தாலும் மனச தேத்திகிட்டு மலை மேல கூடு கட்டுச்சு கழுகு.
ஆனா வண்டு பெரு முயற்சி செஞ்சு மலைமேல ஏறி, கழுகோடா கூட்டுக்கு வந்துச்சு.
அங்க திரும்பவும் கழுகு முட்டை இட்டு வச்சிருந்துச்சு, இப்பயும் அந்த முட்டை எல்லாத்தையும் தள்ளி விட்டுச்சு.
திரும்ப முட்டை எல்லாம் உடைஞ்சத பார்த்த கழுகுக்கு ரொம்ப கோபம் வந்துச்சு.

அதனால படைப்பு கடவுள் ஜுபிட்டரோட இடத்துக்கு வந்துச்சு கழுகு.
அங்க அமைதியா உக்காந்திருந்தாரு ஜுபிட்டர், உடனே ஒரு யோசனை வந்துச்சு கழுகுக்கு.
அவரோட மடியிலேயே முட்டைகளை இட்டு வச்சுச்சு ஜுபிட்டர்.
ஆனா அந்த வண்டு ஒரு பெரிய களிமண் உருண்டைய எடுத்துட்டு பறந்து வந்துச்சு.
சரியா ஜூபிட்டரோட மடியில அந்த களிமண் உருண்டைய போட்டுச்சு.
திடீர்னு ஏதோ விழுந்ததும், ஜூபிட்டர் ஒரு நிமிஷம் அதிர்ச்சி ஆனாரு.
அப்ப அந்த முட்டைகள் எல்லாம் கீழ விழுந்து ஒடஞ்சிருச்சு.
இத எல்லாம் பார்த்த ஜூபிட்டர் ரெண்டு பேரையும் கூப்பிட்டு சமாதானம் பண்ணுனாரு.
ஆனா எவ்வளவு முயற்சி செஞ்சும் வண்டோட மனசு மாறவே இல்ல ,நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் என் நண்பனை கொன்ன அந்த கழுக சும்மா விடமாட்டேனு சொல்லுச்சு.
கழுகு சொல்லுச்சு எனக்கு உணவா படைக்கு பட்ட உணவ நான் சாப்பிட கூடாதா, ஏன் இப்படி என்னோட முட்டைகளை இப்படி உடைக்குதுனு கேட்டுச்சு கழுகு.
கொஞ்சம் குழப்பத்துல இருந்த ஜூபிட்டர் ஒரு முடிவு செஞ்சாரு ,இனிமே வண்டு வர்ற சீசன்ல கழுகு முட்ட போடாது, கழுகு முட்ட போடுற காலத்துல வண்டு பறக்காதுனு இயற்கை காலகட்டத்த மாத்தி வச்சாரு ஜூபிட்டர் கடவுள், அதனால அந்த பிரச்னை தீர்வுக்கு வந்துச்சு.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்